லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டனர்.
சங்ககிரி:
சங்ககிரி நல்லப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவர், சந்தைப்பேட்டை செல்லியம்மன் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, லாட்டரி விற்ற கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.