லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவாடானை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்.பி. பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற கே. கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு (வயது 74) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 28 லாட்டரி சீட்டுகள், ரூ.3 ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்தனர்.