லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நாகூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Update: 2023-04-30 18:45 GMT

நாகூர்:

நாகையை அடுத்த நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. விசாரணையில் தெத்தி சமரசம் நகரை சேர்ந்த சேக்அலாவுதீன் (வயது 41) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் சேக் அலாவுதீனை கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்