லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-15 18:47 GMT

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில் மாவட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மங்களமேட்டை அடுத்துள்ள சின்னாறு ஆர்ச் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன் மேற்பார்வையில் மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்ற லெப்பைகுடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணனை(வயது 43) கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்