லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மயிலாடுதுறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-22 18:47 GMT

மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா பாலம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை கூறைநாடு அண்ணாவீதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த குப்புசாமி (வயது 52) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்