லாட்டரி சீட்டு விற்றவர் கைது
முத்துப்பேட்டை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை சிவராமன் ஸ்தூபி அருகே ஒருவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு லாட்டரி சீட்டுகளை விற்ற வைரவன்சோலை கிராமத்தை சேர்ந்த இளையராஜாவை(வயது38) கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4500-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.