லாட்டரி சீட்டு விற்றவர் கைது
வேதாரண்யம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் இங்கா்சால் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு கோப்பன்நகா் பகுதியில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மாமல்லன்(வயது32) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமல்லனை கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு மற்றும் ரூ.250 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.