லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கடவூர் வட்டம், சிந்தாமணிப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்துப்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த அப்பாஸ் (வயது 30) என்பவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.