லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Update: 2023-07-06 20:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், பொள்ளாச்சி மின் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 36) என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 42 லாட்டரி சீட்டுகள், ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்