லாட்டரி விற்றவர் கைது

திருவாடானை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-27 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா சி.கே.மங்கலம் பஸ் நிறுத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக திருவாடானை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது சைபுல் கிஷாம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

இதில் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 65) என்பவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1050-ஐ கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்