அரூர்:
அரூர் போலீசார் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அரூரை சேர்ந்த பல்லவரசு (வயது 38), அக்பர்ஷெரிப் (29) என தெரியவந்தது. இந்த 2 பேரிடமும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது இவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.45 ஆயிரத்து 630 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.