மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-12-29 17:05 GMT

அரக்கோணம் தாலுகா பகுதிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிற்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்பேரில் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரக்கோணம் தாலுகா பாராஞ்சியை அடுத்த மின்னல் எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் சந்தேகப்படும்படி ஒரு லாரியும், ஒரு பொக்லைன் எந்திரமும் நின்றிருந்தது. பின்னர் தாசில்தார் அங்கிருந்த டிரைவர்களிடம் மண் எடுப்பதற்கான உரிய ஆவணங்களை கேட்ட போது ஆதாரத்தை காட்டாமல் அங்கிருந்து டிரைவர்கள் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதனைத்தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை தாசில்தார் சண்முகசுந்தரம் பறிமுதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்