மழை வெள்ளத்தில் சிக்கிய லாரி

பெரியநாயக்கன்பாளையத்தில் மழை வெள்ளத்தில் லாரி சிக்கியது.

Update: 2023-10-09 20:30 GMT

பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது பாலமலை ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் தேங்கிய மழை வெள்ளத்தில் லாரி ஒன்று சிக்கியது. மேலும் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்