3 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்

களம்பூா் அருகே 3 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-31 12:46 GMT

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யா, ஜெய்சங்கர், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற லாரியை நிறுத்தி ேசாதனை செய்தனர். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த கலசபாக்கம் தாலுகா தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாபு (வயது 35) மற்றும் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, மாவட்ட உணவு பாதுகாப்பு போலீசாரிடம் களம்பூர் போலீசார் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்