கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

Update: 2022-09-23 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை உதவி புவியியலாளர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் பாஞ்சாலியூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பாஞ்சாலியூர் தொடக்கப்பள்ளி அருகே கேட்பாரற்று நின்ற லாரியை சோதனையிட்டதில், ஒரு யூனிட் கற்கள் கடத்தப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் கற்கள் நடத்திய நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்