கூத்தாநல்லூர் அருகே உள்ள வக்ராநல்லூர் நீர்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் அகத்தியன் (வயது19). இவர் திருவாரூர் திரு. வி.க.அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வேளுக்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அகத்தியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அகத்தியன் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கரூர், தென்னம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.