கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

மத்தூர் அருகே கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-13 18:45 GMT

மத்தூர்

மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை அவர்கள் சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் கற்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அலுவலர்கள் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாரி உரிமையாளர் சிவம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (வயது30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்