ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை போலீசார் பாவக்கல் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் 4 யூனிட் மண் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மண் நடுப்பட்டியில் இருந்து சிங்காரப்பேட்டைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் மற்றும் உரிமையாளா் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.