பாகலூர் அருகேஅரசு நிலத்தில் மண் அள்ளிய லாரி பறிமுதல்

Update: 2023-09-15 19:45 GMT

ஓசூர்

பாகலூர் அருகே உள்ள காளஸ்திபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கோவிந்தசாமி. இவர் எலுவப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் லாரியில் ஒருவர் மண் அள்ளிக் கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எலுவப்பள்ளியை சேர்ந்த நஞ்சா ரெட்டி (வயது53) என்பதும், அனுமதியின்றி மண் அள்ளி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்