மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி

நன்னிலம் அருேக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2023-07-19 19:15 GMT

நன்னிலம்;

நன்னிலம் அருேக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

லாாி மோதியது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேஉள்ள சலிப்பேரி தென்னஞ்சார் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது22). இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்தும்(22) மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளைகுப்பத்துக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரிகரகரன் ஓட்டினார். ரஞ்சித் பின்புறம் அமர்ந்து இருந்தார். சலிப்பேரி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த ரஞ்சித் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் இறந்தார். இது குறித்து ஹரிகரன் நன்னிலம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்