முத்தூர்,
நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை ஊராட்சிக்குட்பட்ட அரண்மனைகாடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி வர்ஷினி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் அருண்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் அருண்குமார் மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்துக்கொண்டு சிவன்மலையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்த அருண்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த காங்கயம் போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------