விழுப்புரத்தில்சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி
விழுப்புரத்தில் சாலை விபத்தில் லாரி டிரைவர் பலியானாா்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா தணவாய் காடு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணி (வயது 54). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஓட்டிச் சென்றார். விழுப்புரம் புறவழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற ஆம்னி பஸ் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் மணி மட்டும் பலத்த காயமடைந்தார். இதையடுதது சென்னை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.