அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி
பாவூர்சத்திரத்தில் அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலியானார்.;
பாவூர்சத்திரம்:
சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் அவனிகோந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஆணைமுத்து (வயது 57). லாரி டிரைவர். இவர் நேற்று இரவு நெல்லையில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி வந்தார். பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக சாலையை கடந்தார். அப்போது நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஆணைமுத்து மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று ஆணைமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் விசாரணை வருகின்றனர்.