லாரி டிரைவர் திடீர் சாவு

நெல்லையில் லாரி டிரைவர் திடீர் இறந்தார்.;

Update: 2022-11-18 19:37 GMT

காஞ்சீபுரத்தில் இருந்து நெல்லை மேலப்பாளையம் அருகில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு லாரியில் மதுபான பாட்டில்கள் லோடு ஏற்றி கொண்டு வரப்பட்டது. அந்த லாரியை காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரபாக்கம் புதுப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 48) ஓட்டி வந்தார். நேற்று அதிகாலையில் டாஸ்மாக் குடோன் அருகில் லாரியில் தூங்கி கொண்டிருந்த மணிகண்டனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்