லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை

களம்பூர் அருகே லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-12-19 16:46 GMT

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த எட்டிவாடி கிராமத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 45), லாரி டிரைவர். அவரது மனைவி செல்வி.

கங்காதரன் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்யும் போது எல்லாம் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்வதாக மிரட்டியுள்ளார். நேற்று முன்தினம் குடிபோதையில் கங்காதரன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில், தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்‌.

Tags:    

மேலும் செய்திகள்