லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்னிலை அருகே உள்ள மீனாட்சி வலசு காலனியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 42). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி உமாபதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்த அந்தோணிசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தோணிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உமாபதி கொடுத்த புகாரின்பேரில் தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.