ஏர் ஹாரனில் அதிக ஒலி எழுப்பியபடி வந்த லாரி டிரைவர் - போலீசார் கொடுத்த நூதன தண்டனை
ஏர் ஹாரனில் அதிக ஒலி எழுப்பியபடி சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நாகை புறவழிச்சாலையில் போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்தில் இருந்து நாகைக்கு லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் அஜித், லாரியில் இருந்த ஏர் ஹாரனில் அதிக ஒலி எழுப்பியபடி சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார், அதில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ஏர் ஹாரனை லாரியின் டயருக்கு அடியில் வைத்து, அதன் மீது லாரியை ஏற்றச் செய்து நூதன தண்டனை வழங்கிய போலீசார், லாரி டிரைவர் அஜித்தை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.