மணல் திருடிய லாரி டிரைவர் கைது

மணல் திருடிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-16 18:29 GMT

வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பம்பாளையம் பிரிவு அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், காவிரி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல ்செய்தனர். மேலும் ஆற்றில் மணல் திருடியதாக லாரி டிரைவர் பிரபு (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்