மது கடத்தி வந்த லாரி டிரைவர் கைது
மது கடத்தி வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தரகம்பட்டி அருகே உள்ள சிந்தாமணிப்பட்டி போலீசார் மலைப்பட்டி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை கடத்தி வந்ததாக செம்பிய நத்தம் ஊராட்சி மோளபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மருதமுத்து (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 114 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.