கிராவல் மண் கடத்திய லாரி டிரைவர் கைது
கிராவல் மண் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருமயம்:
திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் அருகே லாரிகளில் கிராவல் மண் வெட்டி எடுத்து செல்லப்படுவதாக திருமயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நளினி மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லாரியில் கிராவல் மண் கடத்தி வந்தது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 35) என்பது ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து, கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.