திருமங்கலம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து நேற்று அதிகாலை கரும்பு ஏற்றுவதற்காக லாரியை நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் வந்தபோது மதுரை பரவை மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு ஏற்றி சரக்கு வாகனம் கரும்பு ஏற்ற வந்த லாரி மீது மோதியது. இதில் கரும்பு ஏற்ற வந்த லாரியின் கிளீனர் சங்கரன்கோவில் கோமதிபுரத்தை சேர்ந்த கண்ணன் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் ஆரோக்கியம் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர் வேல்பாண்டி ஆகியோர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.