மொரப்பூர் அருகேகற்கள் கடத்திய லாரி பறிமுதல்

Update: 2023-05-14 19:00 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளி பகுதியில் அரசு அனுமதியின்றி உளி கற்கள் லாரியில் கடத்துவதாக மொரப்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுந்தரம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் அரசு அனுமதியின்றி உளி கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டிப்பர் லாரியை ஓட்டி வந்த கர்த்தாங்குளம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி மற்றும் அதில் இருந்த 150 உளி கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்