லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

Update: 2023-06-05 16:41 GMT


கோவையில் இருந்து லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் பொங்கலூரை அடுத்த அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வளைவில் திரும்பும் போது திடீரென லாரி கவிழ்ந்தது. அதிக பாரம் இருந்ததால் தாக்குப் பிடிக்க முடியாமல் சாலையில் கவிழ்ந்து விழுந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமமின்றி செல்ல தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்.

மேலும் செய்திகள்