"நடப்பதை பொறுத்து இருந்து பாருங்கள்..." - ஒ.பன்னீர் செல்வம் பேட்டி

நடப்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-14 16:46 GMT

சென்னை,

சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை சந்தித்தோம்" என்று கூறினார்.

பின்னர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் முழுமையான தொண்டர்களை மட்டுமே தொண்டர்கள் என்ன மனநிலையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் என்னுடைய அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அது ஒன்றுதான் எங்களுடைய இதயபூர்வமான ஏற்பாடு. எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொருத்திருந்து பாருங்கள்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்