குளிர்கால கூட்டத்தொடர் - நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-12-23 06:24 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் அலுவல்கள் 97 சதவீதம் நடைபெற்றதாகவும் 13 அமர்வுகளில் மொத்தம் 62 மணி நேரம் 42 நிமிடங்கள் மக்களவையின் அலுவல்கள் நடைபெற்றதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். 

அதேபோல், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களையின் அலுவல் பணிகள் 102 சதவிகிதம் நடைபெற்றதாகவும் 13 அமர்வுகளில் 64 மணி நேரம் 50 நிமிடங்கள் அலுவல்கள் நடைபெற்றதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்