லோக் ஜனசக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் லோக் ஜனசக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி-கச்சேரி சாலையில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமர்ஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் துரைஎழிலன், மகளிரணி தலைவி அழகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ஓவியர் ஆனந்த் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் சிறுவங்கூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மரப்பட்டா இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாவும், அதற்கு பட்டா பெற முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி தலைவர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகி காசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.