குண்டலபட்டி அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

குண்டலபட்டி அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-23 16:12 GMT

தர்மபுரி:

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி குண்டலபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேசை நாற்காலி, டேபிள், டெஸ்க் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் தளவாட பொருட்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் சரஸ்வதி வரவேற்று பேசினார். இந்ந நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் நீலாபுரம் செல்வம், செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில், நிர்வாகிகள் ராஜா, சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்