வீட்டை பூட்டிக் கொண்டு தவித்த 2 வயது சிறுவன் மீட்பு

கழுகுமலை அருகே வீட்டை பூட்டிக் கொண்டு தவித்த 2 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

Update: 2023-06-23 18:45 GMT

கழுகுமலை:

.கழுகுமலை அருகே உள்ள கரட்டுமலை நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது (35). இவர் கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு துரைச்சி (30) என்ற மனைவியும் 2 வயதில் சுஷாந்த் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று சுஷாந்த் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அவனை வீட்டில் விட்டுவிட்டு துரைச்சி வெளியே சென்றிருந்துள்ளார். அப்போது, சிறுவன் தவறுதலாக உள்பக்கமாக கதவை பூட்டியுள்ளான். மீண்டும் கதவை திறக்க முடியாததால், சிறுவன் கதறி அழுதுள்ளான். சிறிது நேரத்தில் திரும்பி வந்த துரைச்சி, மகன் வீட்டிற்குள் சிக்கி கொண்டு அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரும், அக்கம் பக்கத்தினரும் நீண்டநேரம் போராடியும் கதவை திறக்க முடியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையில் மீடபு குழுவினர் விரைந்து வந்து சுமார் அரைமணிநேரம் போராடி கதவை உடைத்து உள்ளே சென்று, மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்