எத்திலோடு ஊராட்சி அலுவலகத்துக்கு 'பூட்டு'
அடிப்படை வசதி செய்து தராததால் எத்திலோடு ஊராட்சி அலுவலகத்துக்கு ‘பூட்டு’ போட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நிலக்கோட்டை ஒன்றியம், எத்திலோடு ஊராட்சியில் உள்ள ஆவாரம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆவாரம்பட்டியை சேர்ந்த சிலர் அடிப்படை வசதிகள் செய்து தராததால் எத்திலோடு ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி விளாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாக ஆவாரம்பட்டியை சேர்ந்த பவுன் பாண்டி உள்பட 2 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.