நூலகத்தின் பூட்டு உடைப்பு
வீரபாண்டியில் நூலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அருகே வீரபாண்டியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீரபாண்டியை சேர்ந்த புவனேஷ்0யர்வு அளிக்கப்பட்டு தேவதானப்பட்டிக்கு பணிநியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்ல மறுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் நூலக அலுவலர் ஆண்டாள், நூலகர் புவனேஷ்வரி ஆகியோர் மாறி மாறி வீரபாண்டி கிளை நூலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். அந்த பூட்டை உடைத்தது தொடர்பாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், வீரபாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.