திருச்செந்தூர் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
திருச்செந்தூர் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, அமலி நகர், தோப்பூர், சண்முகபுரம், முத்து நகர், காந்தி நகர், சாமியார்தோப்பு, காயல்பட்டினம், அருணாசலபுரம், கொம்புத்துறை, சிங்கிதுறை, முத்து கிருஷ்னாபுரம், ராஜமணியாபுரம், பாரதிநகர், நடராஜ நகர், காமராஜபுரம், பஜார் தெற்கு, அங்கமங்கலம், அன்பு நகர், தோப்புவிளைரோடு, தச்சமொழி, அமராவதிகுளம், புளியடி மாரியம்மன் கோவில் தெரு, சொக்கலிங்கபுரம், கருவேலம்பாடு, கருங்கடல், நாசரேத் ஆழ்வார் ரோடு, மர்காஷியஸ் ரோடு, ஆழவார்தோப்பு, அப்பன்கோவில், வரதராஜபுரம், வாலிவிளை, பிள்ளைவிளை, புதுமனை, குலசேகரன்பட்டினம், கொட்டங்காடு, மணப்பாடு, மாதவன்குறிச்சி, உசரத்துகுடியிருப்பு மற்றும் புத்தன்தருவை ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.