கிராம உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க கூட்டம்
நீடாமங்கலம் ஒன்றிய கிராம உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க கூட்டம் நடந்தது.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் ஒன்றிய கிராம உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டம் சங்க ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சாந்தகுமார், ஒன்றிய துணை தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் பதவி, பாதுகாப்பு நலன் கருதி அடையாள அட்டை மற்றும் ஊதிய நிலுவை பாக்கி கேட்டு பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.