நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4ம் தேதி உள்ளூர் விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-01-01 06:58 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள்.

இந்த நிலையில், படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (4-1-2023) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்