உள்ளாட்சி துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-21 19:45 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பாக ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அந்த நகராட்சியில் பணிபுரியும் உள்ளாட்சித்துறை நிரந்தரத் தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டுள்ள சேமிப்பு மற்றும் புதிய ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 52 மாதங்கள் கூடிய நிலுவையில் உள்ள தினக்கூலி ஊதியத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து டெங்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், தளவாடப் பொருட்கள் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் தம்பிசிவம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன், ராஜாபெரியசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி தூய்மை பணி தலைவர் சிலம்புச்செல்வி உள்ளிட்ட ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்