மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை

ஆனத்தூர் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆணை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.வழங்கினார்

Update: 2023-01-01 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆனத்தூர், மேல் தனியாலம்பட்டு, காரப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜி பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் கல்யாணி அனைவரையும் வரவேற்றார். விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டு 10 மகளிர் சுய உதவிகுழுவை சேர்ந்த 136 பேருக்கு ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 547 கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், அவைத்தலைவர் கலியவரதன், ஒன்றிய பொருளாளர் மைக்கேல், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய துணைச் செயலாளர் தாமோதரன், வீராசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், விவசாய அணி அமைப்பாளர் அய்யனார், முன்னாள் அவைத் தலைவர் அரங்கராமூர்த்தி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரவி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்