15 பயனாளிகளுக்கு கடன் அனுமதி சீட்டு
15 பயனாளிகளுக்கு கடன் அனுமதி சீட்டு;
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கால்நடை பராமரிப்பு கடன் திட்டத்தின் கீழ், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. ரூ. 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கான கடன் அனுமதி சீட்டுக்களை, 15 பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், கும்பகோணம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் தி.கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெ.சுதாகர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், க.நேரு, ஜெயந்திதேவேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் எல்.செல்வராஜன், மாவட்ட பிரதிநிதி ஜெ.சுரேஷ், சோழபுரம் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜெ.ஜெபருதீன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.