அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும்மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் மேளா

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும்மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் மேளா வருகிற 18-ந் தேதி நடக்கிறது

Update: 2022-08-10 15:03 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் மேளா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடன் மேளா

கூட்டுறவு சங்கங்களின்பதிவாளர் வழிகாட்டுதலின் படி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள 161 கூட்டுறவு கடன் சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கடன் மேளா நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தில் 47 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ18 லட்சத்து 45 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 672 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ரூ.2 கோடியே 35 லட்சம் அளவுக்கான கடன் மனு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மனுதாரர்களின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கடன்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக 917 பேர் சேர்ந்து உள்ளனர். இந்த கடன் வழங்கும் முகாம் மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

18-ந் தேதி

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் மேளா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதுவரை கூட்டுறவு கடன் சங்கங்களில் சேராத மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதி அருகே உள்ள கடன் சங்கங்களில் மனுக்களை பெற்று உறுப்பினராகி, நிதியுதவி பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்