100 சதவீத மானியத்தில் ரூ.50 ஆயிரம் கடன் உதவி

திருநங்கைகளுக்கு சுய தொழில் தொடங்க 100 சதவீத மானியத்தில் ரூ.50 ஆயிரம் கடன் உதவி வழங்கப்படுகிறது என உதவி கலெக்டர் யுரேகா தெரிவித்தார்

Update: 2023-09-01 18:45 GMT

திருநங்கைகளுக்கு சுய தொழில் தொடங்க 100 சதவீத மானியத்தில் ரூ.50 ஆயிரம் கடன் உதவி வழங்கப்படுகிறது என உதவி கலெக்டர் யுரேகா தெரிவித்தார்

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் யுரேகா தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தாதேவி வரவேற்றார். இதில், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் 20 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உதவி கலெக்டர் யுரேகா பேசுகையில், திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ரூ.50 ஆயிரம் கடன் உதவி

திருநங்கைகள் சுயதொழில் தொடங்க 100 சதவீத மானியத்தில் ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, அனைவரும் இதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

முன்னதாக, திருநங்கைகள் அனைவரும் தங்களுக்கு ஒரே இடத்தில் வீடு கட்டி குடியிருக்க வசதியாக அரசு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்