174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி
174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.;
சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து, நடைபெற்ற வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயக்கடன், கல்விக்கடன், தொழில்கடன், மகளிர்சுயஉதவி குழுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 174 பேர்களுக்கு ரூ 14 கோடியே. 35 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காரைக்குடி மண்டல மேலாளர் லீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.