பாப்பிரெட்டிப்பட்டி:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வட்டார வணிக வளமையம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹீ முகமது நஷிர் தலைமை தாங்கி, தொழில் முனைவோருக்கு கடன் உதவிக்கான ஆணைகளை வழங்கினார். மொத்தம் 22 பேருக்கு தனிநபர் கடனாக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், ராஜேஷ், மாவட்ட வல பயிற்றுனர் தென்னரசு, வட்டார மேலாளர் அருண்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரத்னவேல், சுந்தரபாண்டியன், வெற்றிச்செல்வி, பூந்தளிர், துர்காதேவி, அஸ்வினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.